ஏ9 வீதி புளியங்குளத்தில் கோரவிபத்து – ஒருவர் மரணம்!

0
1005

இன்று அதிகாலை 4.45 மணிக்கு வவுனியா, புளியங்குளம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். Horrible Accident A9 Road Puliyankulam A Driver Dead

இன்று அதிகாலை இடம்பெற்ற இவ்விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, புளியங்குளம், இராமனூர் பகுதியில் குறித்த விபத்து இடம்பெற்றது. கொழும்பில் இருந்து கிளிநொச்சி நோக்கி இராணுவத்தினருக்கு பொருட்களை கொண்டு சென்ற கன்டயினர் ரக வாகனமும், பரந்தனில் இருந்து வவுனியா நோக்கி வந்த ஜேர்னி ரக பஸ்சும்  ஏ9 வீதி, புளியங்குளம், இராமனூர் பகுதியில் நேருக்கு நேர் மோதியதில் இவ்விபத்து ஏற்பட்டது.

இவ் விபத்து காரணமாக இரு வாகனங்களின் சாரதிகள் உட்பட 5 பேர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் கன்டயினர் ரக வாகன சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புளியங்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகிறார்கள்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை