சீனாவில் தண்ணீரில் மிதக்கிறது டொனால்டு டக் பொம்மை

0
765
rubber duck waits wings hong kong trip

(rubber duck waits wings hong kong trip)
சீனாவில் பொழுதுபோக்கு பூங்கா ஒன்றில் தண்ணீரின் மீது மிதக்கவிடப்பட்டுள்ள டொனால்டு டக் பொம்மை பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த வால்ட் டிஸ்னி வடிவமைத்த டொனால்டு டக் என்ற இந்த கார்ட்டூன் கதாபாத்திரம் உலகம் முழுவதும் குழந்தைகளை மட்டுமின்றி, அனைத்து வயதினரையும் ரசிகர்களாகக் கொண்டுள்ளது. குறும்புத்தனத்துடன் புத்திசாலித்தனமும் கொண்ட இந்த டொனால்டு டக்கின் 11 மீட்டர் உயர ரப்பர் பொம்மை ஒன்று சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள டிஸ்னிலேண்ட் பொழுதுபோக்கு பூங்காவில் நிறுவப்பட்டுள்ளது.

அங்குள்ள ஏரி நீரில் மிதந்து கொண்டிருப்பது போல காட்சி தரும் பிரம்மாண்டமான டொனால்டு டக்கின் பின்னணியில் புகைப்படம் எடுத்துக் கொள்ள பார்வையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஷாங்காய் நகரில் உள்ள செஞ்சுரி பூங்காவில் ஏற்கனவே 2014-ஆம் ஆண்டு பிரம்மாண்டமான மஞ்சள் வண்ண வாத்து பொம்மை மிதக்கவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

rubber duck waits wings hong kong trip

Tamil News