விடுதலைப் புலிகள் செயற்பாட்டாளர்களின் கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா

0
728
Release Tamil political prisoners UN decision

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில், விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்கள் ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. (Release Tamil political prisoners UN decision)

பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் விடுதலை புலிகளின் 125 உறுப்பினர்களை விடுவிக்குமாறு, ஸ்ரீலங்கா அரசுக்கு உத்தரவிடுமாறு ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே இந்த கோரிக்கையை ஐ.நா ஆணைக்குழு நிராகரித்ததுடன், ஸ்ரீலங்கா நிதித்துறை அமைப்பிடம் உத்தரவிடுவதற்கு தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

விமானங்களுக்கு ஏவுகணைகள் ஏவியது, பயணிகள் பஸ் வண்டிகளுக்கு குண்டு வைத்து தாக்கியமை மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் தொடர்பாகவே விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவர்களை விடுதலை செய்யுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசிடம் கோரிக்கை விடுத்த போதிலும், தமிழர் தாயகப் பிரதேசங்களில் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டும், அரசியல் கைதிகள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டும் இதுவரை தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Release Tamil political prisoners UN decision