வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக பா.டெனீஸ்வரனின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார். North Provincial Council CM Vigneswaran Court Insult Case
வடக்கு மாகாண அமைச்சராக டெனீஸ்வரன் தொடர்ந்து நீடிப்பார் என்ற மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று செயற்பட வடக்கு முதலமைச்சர் மறுத்து வருகின்றமை தொடர்பாக இவ்வாறு குற்றச்சாட்டு பத்திரமொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க மறுத்து வடக்கு மகாண முதலமைச்சர் நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டை இழைத்துள்ளதாகவும் சட்டத்தரணி மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வடக்கு மாகாண அமைச்சர் பதவியிலிருந்து நீக்கியமை சட்டத்திற்கு முரணானது எனத் தெரிவித்து பா.டெனீஸ்வரன் முதலமைச்சருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருந்தமை யாவரும் அறிந்ததே
அத்துடன் வழக்கை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், டெனீஸ்வரன் அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்ட உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, அவர் தொடர்ந்தும் அமைச்சுப் பதவியில் நீடிப்பார் என அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- விஜயகலாவின் சர்ச்சை : இராணுவம் அதிரடி முடிவு
- பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ
- நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுக்கொலை : புறக்கோட்டையில் பதற்றம்
- ஜெம்பட்டா வீதியில் கடும் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் பலி
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்