விஜயகலாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியும் பறிபோகும்!

0
192
Attorney General instructed Inspector General VIjayakala speech

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகலாம் என அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். Minister Mahinda Amaravera Says Vijayakala Loss MP Post

பொலியத்தை பிரதேசத்தில் விகாரை ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து முற்றிலும் தவறானது. அது நாட்டுக்கு துரோகம் செய்யும் கருத்து. விஜயகலா இராஜாங்கள அமைச்சர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

எனினும் இது போதுமானதல்ல. எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் இழக்கக் கூடும் எனவும் மகிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் அண்மையில் உரையாற்றிய விஜயகலா மகேஸ்வரன், விடுதலைப் புலிகள் அமைப்பை மீண்டும் ஏற்படுத்த வேண்டிய நிலைமை உருவாகியுள்ளதாக கூறியிருந்தார்.

அவரது இந்த கருத்து, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியதுடன் இறுதியில் அவர் தனது இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய நேர்ந்தது.

மேலும் அவர் சம்பந்தமாக ஒழுக்காற்று விசாரணை நடத்த ஐக்கிய தேசியக்கட்சி நான்கு பேர் அடங்கிய குழு ஒன்றையும் நியமித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites