மகிந்தவுக்கு பகிரங்க சவால் விடுத்துள்ள கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம்!

0
445
Minister Akila Viraj Kariyawasam Open Statement Mahinda Rajapaksa

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச சீன நிறுவனம் ஒன்றிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் முடிந்தால், நாடாளுமன்றத்தில் அறிக்கை வெளியிடுமாறு மகிந்த ராஜபக்சவிற்கு சவால் விடுப்பதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். Minister Akila Viraj Kariyawasam Open Statement Mahinda Rajapaksa

அவர் மேலும் கூறியதாவது:-

கண்ணாடி மாளிகைக்குள் இருந்து கல்வீசும் அரசியலில் ஈடுபட்டுள்ள சிலர், தாம் இப்போது கண்ணாடி மாளிகையில் இருப்பதை அறியாதிருப்பது கவலைக்குரியது.

இதனை தவிர முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவின் மனைவி புஷ்பா ராஜபக்சவின் நிதியம் ஒன்றுக்கும் சீனாவின் நிறுவனம் ஒன்று கோடிக்கணக்கில் பணத்தை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்ட பணம் அபிவிருத்தித் திட்டங்களுக்காக பெறப்பட்ட கடன் கணக்கில் சேர்க்கப்பட்டு, அந்த கடனை நாட்டு மக்களிடம் அறிவிட்டுள்ளனர்.

இப்படியான ஊழல், மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் மூடிமறைப்பதற்காக மத மற்றும் இனவாதத்தை தூண்டும் அணிகளுக்கு எதிராக மக்கள் எதிர்காலத்தில் தக்க பதிலை வழங்குவார்கள் என தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்தில் பணியாற்றி வரும் கல்விசாரா ஊழியர்களுடனான சந்திப்பின் போதே அகில விராஜ் காரியவசம் இவ்வாறு கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites