வட மாகாண அதிகாரங்களை குறைக்க அரசியல்வாதிகள் முயற்சி : குணசீலன்

0
116
kunaseelan

அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வடமாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பதற்காகவே செயற்படுவதாக மாகாண சுகாதார அமைச்சர் ஜீ. குணசீலன் தெரிவித்துள்ளார். (kunaseelan)

மன்னாரில் அவரது அலுவலகத்தில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வட பகுதியில் அதிகளவில் குற்றச்செயல்கள் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பில் பலரும் விமர்சித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன் ஒரு வெளிப்பாடாக அமைந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்து பெரிய சர்ச்சையாக மாறியுள்ளது.

தனிப்பட்ட ஒரு அரசியல் வாதியின் கூற்று சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், மக்களும் இவ்வாறு சிந்திக்கக்கூடிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளமை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வட மாகாண முதல்வரும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறும், அதன் பின்னர் தாமே வன்முறைகளை கட்டுப்படுத்துவதாக தெரிவித்திருந்தார்.

ஆனால் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் வடமாகாண சபையின் அதிகாரங்களை குறைப்பதற்காகவே செயற்படுவதாக மாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:kunaseelan,kunaseelan,kunaseelan,