கிளிநொச்சியில் வலம்புரி சங்குடன் இருவர் கைது!

0
379

கிளிநொச்சி கனகபுரம் பகுதியில் வைத்து சுமார் ஒருகோடி பெறுமதியான வலம்புரிச் சங்குடன் நேற்று இரவு இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர். Kilinochchi Police Arrested Two Person Valampuri Conch

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது டொல்பின் ரக வாகனத்துடன் இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். .

கைதானவர்களை கிளிநொச்சி பொலிஸார் இன்று கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்த இருப்பதாகவும் விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்

இருப்பினும் மீட்க்கப்பட்ட சங்கு பெரிய அளவில் இருப்பதுடன் இது இடம்புரி சங்கு என உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சங்கை கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம் கடத்த முயன்ற போதே விசேட அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர் என தெரிவிக்கபட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites