தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்திற்கு வடிவாகனத்தில் வந்தவர்களால் பரபரப்பு

0
210
incident happened Tellippalai Sri Durga Devi temple

யாழ். தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலயத்துக்கு வழிபாட்டிற்காக வடிவாகனத்தில் சென்றவர்களை விரட்டியடித்த சம்பவம், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. (incident happened Tellippalai Sri Durga Devi temple)

வடிவாகனத்தில் சென்ற 3 பேர் ஆலய சூழலில் கண்மண் தெரியாமல் வேகமாக ஓடித்திரிந்தனர்.

இதன்போது, ஆலயத்துக்கு வழிபடச் சென்ற சிறுவன் ஒருவன் மீது வடிவாகனத்தை மோதப் பார்த்த போது சிறுவன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளான்.

இதனைக் கண்ட சிறுவனின் தகப்பன் வடிவாகனத்தில் வந்தவர்களைப் பார்த்து பேசிய போது வாகனத்தில் வந்தவர்கள் வாகனத்தை விட்டு இறங்கி வந்து சிறுவனின் தகப்பனை எச்சரித்ததுடன், இது எங்களுடைய ஏரியா எதுவும் நாங்கள் செய்வோம் எங்களை எவரும் ஒன்றுமே செய்ய முடியாது என்று சொல்லிவிட்டுச் சென்றனர்.

இந்த சம்பவத்தை பார்த்த ஆலயத்துக்கு வழிபட வந்தவர்கள் அரைகுறையாக கடவுளை வழிபட்டுவிட்டு அந்த இடத்தைவிட்டு நகர்ந்தனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; incident happened Tellippalai Sri Durga Devi temple