ஐசிசியின் விதிமுறைக்கு மாறாக செயற்பட்ட குற்றத்திற்காக இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோருக்கு எதிராக இன்று விசாரணை இடம்பெறுவதுடன், தண்டனை தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ICC determine Chandimal sanction today
குறித்த விடயத்தினை சர்வதேச கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது.
மே.தீவுகளுக்கு எதிராக சென்.லூசியா மைதானத்தில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, சுமார் இரண்டு மணிநேரம் விளையாட மறுத்ததன் காரணமாக இந்த விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
விளையாட்டின் தன்மையை சீர்குழைக்கும் வகையில் நடந்துக்கொண்ட இவர்களுக்கு ஐசிசி விதிமுறைப்படி மூன்றாம் நிலை குற்றம் பதிவுசெய்யப்பட்டுள்ளது
இதுதொடர்பில் விசாரணை செய்ய நீதித்துறை ஆணையராக மைக்கல் பெலோப்பை ஐசிசி நியமித்துள்ளது.
ஐசிசியின் மூன்றாம் நிலை குற்றத்தின் அடிப்படையில், ஒருவருக்கு 4 தொடக்கம் 8 குற்றப்புள்ளிகள் வழங்கப்படும். இவ்வாறு மூன்றாம் நிலை குற்றத்துக்காக 4 டெஸ்ட் போட்டிகள் அல்லது 8 ஒருநாள் போட்டிகளில் விளையாட தடை விதிக்க முடியும்.
இதன்படி சந்திமாலுக்கு தடை விதிக்கப்படுமாயின், தென்னாபிரிக்க அணிக்கெதிராக நடைபெறவுள்ள 2 டெஸ்ட் போட்டிகளிலும் சந்திமால் நீக்கப்படுவார். ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கதெிரான தொடரின் தலைவராக சந்திமால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் நீக்கப்பட்டால் அணியின் தலைவராக சுராங்க லக்மால் நியமிக்கப்படுவார்.
தினேஷ் சந்திமால் பந்தை சேதப்படுத்திய குற்றத்துக்காக ஏற்கனவே மே.தீவுகளுக்கு எதிரான ஒருபோட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை
- பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்
- சமூக ஒற்றுமையே பலமான ஆயுதம்; சதிகளை முறியடிப்போம்
- யாழில் சிறுமியை கர்ப்பிணியாக்கிய இளைஞன்; இரு சிறுமிகள் மீது பாலியல் துஷ்பிரயோகம்
- வவுனியாவில் தொடரும் வாள்வெட்டு; 10 பேர் கைது
- பாடசாலை செல்ல மாட்டோம்; கால்களை ப்ளேட்டால் வெட்டிய மாணவர்கள்
- ஆற்றுப் பகுதியில் பெண்ணின் சடலம் மீட்பு; நோர்வூட்டில் பதற்றம்
- பெண் பொலிஸின் கையை கடித்த கிராம சேவகர்
- ‘கடவுள் உத்தரவிட்டார், அதனால் செய்தேன்” : இரத்தினப்புரி நீதிமன்றில் விசித்திரம்
Tamil News Group websites
- Cinema.tamilnews.com
- Astro.tamilnews.com
- Sports.tamilnews.com
- Video.tamilnews.com
- France.tamilnews.com
- Cinemaulagam.com
- Gossip.tamilnews.com
- Swiss.tamilnews.com
ICC determine Chandimal sanction today, ICC determine Chandimal sanction today, ICC determine Chandimal sanction today