சுவிஸில் விடுதலைப் புலிகளுக்கு நிதிசேகரிப்பு நடவடிக்கை; சிங்கள பத்திரிகை தகவல்

0
741
Funding Liberation Tigers Swiss

சுவிஸில் உள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் சுவிஸ் நாட்டில் விடுதலை புலிகளுக்கு நிதி சேகரிக்க ஆரம்பித்துள்ளதாக கொழும்பில் இருந்து வெளியாகும் சிங்கள பத்திரிகையான திவயின தகவல் வெளியிட்டுள்ளது. (Funding Liberation Tigers Swiss)

லூசன், பேர்ன், சூரிச், ஷொப்னசன், பாசல், ஆரச் என்ற மாவட்டங்களில் உள்ள விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் இவ்வாறு நிதி சேகரித்து வருவதாகவும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன், விடுதலை புலிகளின் அமைப்பை மீள உருவாக்க வேண்டும் என அண்மையில் அறிவித்த பின்னரே, இந்த நிதி சேகரிப்பு நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, விடுதலைப் புலிகள் அமைப்பு சுவிஸ்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ‘ஞாயிறு திவயின’ பத்திரிகையில் முன்னர் வெளியாகியிருந்தது.

விடுதலைப் புலிகள் ஒரு பயங்கரவாத அமைப்பு இல்லை என சுவிஸ் நீதிமன்றம் அறிவித்துள்ளதனால் இவ்வாறு தமிழ் மக்களிடம் கப்பம் கோருவதற்கு வழி சமைத்துள்ளதாகவும் அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

சுவிஸில் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவன் அப்துல்லா ஜெயபாலன் புலிகளின் அமைப்புக்கு நிதி சேகரிப்பதாக தெரிவித்துள்ளதாகவும் அந்த பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Funding Liberation Tigers Swiss