முஸ்லிம்களுக்கு பாதிப்பில்லாமல் பழைய முறையில் தேர்தலை நடத்தவும் – பைஸர் முஸ்தபா கோரல்

0
442
no connection Boundary Statement my Ministry Faiser Mustafa

(faisur Mustafa voters willing create new electoral system third majority)

மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் புதிய தேர்தல் முறையை உருவாக்க வாக்களித்தவரகள் இன்று சில வரையறுக்கப்பட்ட விடயங்களுக்காக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேடிக்கையாக இருப்பதாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், மாகாண சபை தேர்தலை இந்த வருடத்தில் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

ஆனால், ஆரம்பத்தில் புதிய தேர்தல் முறைமை உருவாக்கத்திற்கு வாக்களித்து மூன்றிலிரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் நடைமுறைப்படுத்த ஆதரவு வழங்கியவர்கள் தற்போது சில வரையறுக்கப்பட்ட விடயங்களை காரணம் காட்டி புதிய தேர்தல் முறைமையினை எதிர்ப்பது வேடிக்கையாகவே உள்ளது.

புதிய தேர்தல் முறை காரணமாக சிறுபான்மை இனத்தவர்களுக்கு குறிப்பாக
முஸ்லிம் மக்களுக்கு எவ்வித அநீதிகளும் ஏற்படாது.

தேர்தல் காலதாமதம் ஆக்கப்பட்டு வருகின்றது என்ற காரணத்தினால் ஜனநாயக முறைமைக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் பழைய முறைமைக்கு ஒரு போதும் மீள் திரும்ப முடியாது.

ஆகவே, மாகாண சபை தேர்தலை சிறுபான்மை மக்களை காரணம் காட்டி சில தரப்பினர் அரசியல் நோக்கங்களுக்காக ஜனநாயக கொள்கையினை மீறுவதற்கு உடந்தையாக செயற்பட முடியாது.

புதிய தேர்தல் முறைமையில் காணப்படுகின்ற குறைப்பாடுகளில் திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபை தேர்தலை இவ்வருடத்திற்குள் நடத்த முடியும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

(faisur Mustafa voters willing create new electoral system third majority)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites