சுற்றாடல் எங்களுக்கு அவசிமாயினும், சுற்றாடலுக்கு நாங்கள் அவசிமில்லை – சம்பிக்க ரணவக்க

0
153
Champika Ranawaka said major changes global climate

(Champika Ranawaka said major changes global climate)

வெள்ளப்பெருக்கு காரணமாக சமகாலத்தில் ஹிரோஷிமோ அனர்த்தத்தையும் விட பாரிய அனர்த்தங்கள் இடம்பெற்று வருகின்றன.

குளிர்ந்த நாடான கனடாவில் வெப்பநிலையை தாங்க முடியாமல் மக்கள்
உயிரிழக்கின்றனர்.

தற்காலத்தில் உலக காலநிலையில் பாரிய மாற்றங்கள் நிலவி வருவதாக மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு 10 ஆனந்த வி்த்தியாலயத்தில் இடம்பெற்ற வள கேந்திரம் மற்றும் கழிவகற்றல் தளத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

மாநகர சபை அமைச்சின் கீழ் உள்ள கழிவகற்றல் முகாமைத்துவ செயற்றிட்டத்தின் கீழ் செயற்படுத்தப்படும் தேசிய பாடசாலை கழிவகற்றல் முகாமைத்துவ நடவடிக்கையின் குறித்த வள நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அமைச்சர் பாட்டளி, முக்கியமான இரண்டு விடயங்களை நாங்கள் மறந்து விடக் கூடாது.

அதில் ஒன்று நாம் வாழும் நமது சுற்றாடலாகும், சுற்றாடல் எமக்கு எவ்வளவு அவசியமானதாக இருந்தாலும், சுற்றாடலுக்கு மனிதர்களாகிய நாம் அவசிமற்றவர்களாகவே இருக்கின்றோம்.

இந்த வான் மண்டலம் தோன்றி சுமார் 4 பில்லியன் வருடங்கள் ஆகியுள்ள நிலையில், மனிதனின் தொழினுட்ப புரட்சி ஏற்பட்டு சுமார் 200 வருடங்களே ஆகின்றன.

4 பில்லியன் வருடங்களை ஒரு வருடமாக எடுத்துக் கொண்டால் மனிதனின் தொழினுட்ப புரட்சி ஏற்பட்டது ஒரு நாளில் கடைசி நிமிடமான 11.59 க்குதான் என்பது எம்மால் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது.

அவ்வாறு நோக்கும் போது இந்த நூதன உலகில் நாம் ஒரு நாள்தான் நிஜமாக வாழ்ந்திருக்கின்றோம் என்று அர்த்தம்.

ஆனால், நாம் இல்லாவிட்டாலும் இந்த உலகிற்கு செயற்பட முடியும். டைனோசர்கள் அழிந்து போனது போல நாங்கள் இல்லாமல் போனாலும் இந்த பிரபஞ்சத்தால் நிலைத்திருக்க முடியும்.

அந்தவகையில் சுற்றாடல் நிலையாக இல்லாமல் எங்களால் வாழ முடியாது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

(Champika Ranawaka said major changes global climate)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites