கம்பஹாவில் பெண்ணொருவர் செய்த சிறிய காரியத்துக்கு கிடைத்த தண்டனை!

0
212
Biscuit Theif Sentenced

கம்பஹா யக்கல சீயனே விலேஜ் பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் பிஸ்கட் திருடிய பெண்ணுக்கு 1500 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது. Biscuit Theif Sentenced

கம்பஹா நீதவான் நீதிமன்றம் இத்தண்டனையை விதித்துள்ளது.

குறித்த பெண் திருடிய பிஸ்கட் பக்கற்றின் விலை 120 ரூபா என தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணத்துக்கு மேலதிகமாக அப்பெண்ணுக்கு ஒத்திவைக்கப்பட்ட 1 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது 5 வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டதாக வழங்கப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட தரப்புக்கு 5000 ரூபா நட்ட ஈடு வழங்கும் படியும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2017 ஆம் ஆண்டுக்காலப்பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.