சமுதாயத்தை சீரழிக்கும் “பிக்பாஸ்” நிகழ்ச்சி! – கொந்தளிக்கும் மக்கள்!

0
254
bigboss ruin society - frightened people

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி விஜய் டி.வி. அலுவலகத்தின் முன் இந்து மக்கள் கட்சியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.“bigboss” ruin society – frightened people

விஜய் டி.வி.யில் கடந்த வருடம் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

தமிழக மக்களின் பெரும் வரவேற்பை அடுத்து, பிக்பாஸ் சீசன் 2 கடந்த ஜூன் 17-ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த முறை இந்து மக்கள் கட்சியினர் பிக்பாஸ்க்கு எதிராக நடத்திய போராட்டமே விளம்பரமாக அமைந்து பலராலும் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு எதிராக இந்து மக்கள் கட்சியினர் மீண்டும் போராட்டத்தை கையிலெடுத்துள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒளிபரப்பை தடை செய்ய வலியுறுத்தி இந்து மக்கள் கட்சியினர், நிகழ்ச்சியை ஒளிபரப்பும் விஜய் டிவி அலுவலகத்தை இன்று காலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 30க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

இதனால் விஜய் டிவி அலுவலகத்துக்கு போலீஸார் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :