இலங்கையர் இருவருக்கு சிங்கப்பூரில் 8 மாத சிறைத்தண்டனை

0
690
one men arrest Colombo peliyagoda area illegal gun latest news

சிங்கப்பூரில் போலி கடவுச்சீட்டுடன் இலண்டன் செல்லவிருந்த இலங்கையர் இருவருக்கு 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 2 Sri Lankans jailed 8 months Singapore news Tamil

நாகமனி கனகதரன் (46) மற்றும் கந்தசாமி நித்தியானந்தன் (27) ஆகிய இருவர் கடந்த மாதம் பிரித்தானிய கடவுச்சீட்டுடன், சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திலிருந்து இலண்டன் செல்வதற்கு தயாராகும் போது விமான நிலைய குடிவரவு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொண்டு வரப்பட்ட நிலையிலே குறித்த இருவருக்கும் 8 மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையொன்றில்,

“கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டு வேலைவாய்ப்பொன்றை தேடியுள்ளனர். இந்நிலையில் இதற்கான ஆயத்தங்களை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் மேற்கொண்டுள்ளார்.

இவர்களை இலங்கையில் இருந்து சிங்கபூர் வழியாக, இலண்டன் செல்வதற்கான ஆயத்தங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்காக குறித்த நபர்களிடமிருந்து 3 இலட்சம் தொடக்கம் 10 இலட்சம் வரையிலான பணம் அறிவிடப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த இருவரும் இலங்கை கடவுச்சீட்டுடன், இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு ஜுன் 18ம் திகதி பயணம் செய்துள்ளனர். அங்கு சென்று இவர்கள் அடுத்த நாள் மலேசியாவைச் சேர்ந்த இஷான் இஷ்மி இஷாக் என்ற 31 வயதான நபரொருவரிடமிருந்து போலி பிரித்தானிய கடவுச்சீட்டு ஒன்றை பெற்று, இலண்டன் செல்வதற்கு ஆயத்தமாகியுள்ளனர்.

இலண்டன் செல்வதற்காக சாங்கி விமான நிலைய டேர்மினல் ஒன்றுக்கு நாகசாமி செல்ல, அதனை தூரத்திலிருந்து கந்தசாமி பார்த்துக்கொண்டிருந்தார். குறித்த இருவரது கடவுச்சீட்டுகளிலும் புகைப்படங்கள் மாத்திரம் சரியாக இருக்க ஏனைய விபரங்கள் தவறாக இருப்பதை அதிகாரிகள் உணர்ந்தனர். இதனால் நாகசாமியின் கடவுச்சீட்டை வழமைக்கு மாறாக நீண்ட நேரம் அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். இதனால் இருவரும் இலண்டன் பயணத்தை நிறுத்தி, மீண்டும் இலங்கை திரும்ப முற்பட்டுள்ளனர்.

இதனால் மீண்டும் வெளியேறும் பகுதிக்கு திரும்பிய இருவரும், இஷான் இஷ்மி இஷாக்கை சந்தித்துள்ளனர். இதன்போது குறுக்கிட்ட அதிகாரிகள் குறித்த மூவரையும் கைதுசெய்துள்ளனர்.

இதில் கடந்த ஜுன் 28ம் திகதி இஷான் இஷ்மி இஷாக்குக்கு நீதிமன்றம் 8 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

இதேவேளை குறித்த இருவர் தொடர்பிலும் அவதானம் செலுத்திய அதிகாரிகள், இவ்வாறான மோசடியுடன் கூடிய ஆவணங்களுடன் வெளிநாடு செல்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இவர்களது குற்றம் நிரூபிக்கப்படுமாயின் 10 வருட சிறைத்தண்டனை மற்றும் 10 ஆயிரம் டொலர் வரையில் அபராதம் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

2 Sri Lankans jailed 8 months Singapore news Tamil, 2 Sri Lankans jailed 8 months Singapore news Tamil, 2 Sri Lankans jailed 8 months Singapore news Tamil