18 ஆயிரம் அரச அதிகாரிகள் பணி நீக்கம் – துருக்கியில் அதிரடி முடிவு

0
139
tamilnews Turkey sacks 18500 staff expected end coup emergency

(tamilnews Turkey sacks 18500 staff expected end coup emergency)

துருக்கியில் ராணுவத்தில் ஒரு பிரிவினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் புரட்சியில் ஈடுபட்டிருந்தனர். மக்களின் உதவியோடு அந்த புரட்சி முறியடிக்கப்பட்டிருந்தது.

அந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியைத் தூண்டியவர் என்று துருக்கி கூறி வரும் மதகுரு பெதுல்லா குலெனின் ஆதரவாளர்கள் என்று குற்றம்சாட்டி, ஏற்கனவே ராணுவம், காவல்துறை, பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் பணியாற்றி வந்த சுமார் 50 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

1 லட்சத்து 50 ஆயிரம் அரசு ஊழியர்களை துருக்கி அரசாங்கம் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டது.

இந்த ராணுவ புரட்சி முயற்சிக்கு அமெரிக்காவில் வாழும் மத குரு பெதுல்லா குலன்தான் சதி செய்துள்ளார் என துருக்கி அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

மேலும் அவரை நிபந்தனையின்றி ஒப்படைக்குமாறும் துருக்கி அரசு வலியுறுத்தியுள்ளது.

இந்தநிலையில், கடந்த 2016 ம் அண்டு ஆட்சியை கவிழ்க்க சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்படும் 8 ஆயிரத்து 998 பொலிஸ் அதிகாரிகள் மற்றும் 6 ஆயிரத்து 152 ராணுவ அதிகாரிகள் உள்பட 18 ஆயிரத்து 500 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக துருக்கி அரசு வெளியிட்டுள்ள உத்தியோகபூர்வ அரச பத்திரிகையில் தெரிவித்துள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த துருக்கி ஜனாதிபதி தேர்தலில் அதிபர் எர்டோகன், தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார்.

திருத்தப்பட்ட அரசியலமைப்பு சட்டத்தின்படி, முன்பு இருந்ததை விட இம்முறை அதிகப்படியான அதிகாரங்களை உடைய அதிபராக அவர் உருவெடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

(tamilnews Turkey sacks 18500 staff expected end coup emergency)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :