கடற்படை வசமுள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய கோரி தமிழக மீனவர்கள் போராட்டம்

0
356
India Tamil Nadu fisher men association group diced visit srilnaka

(tamilnews indian fisherman nonstop protest tomorrow begins)

இலங்கை கடற்படை வசமுள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகளை விடுதலை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மேற்கொள்ளவுள்ளதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

இலங்கை கடற்படை தடுத்து வைத்துள்ள தமிழக மீனவர்கள் மற்றும் படகுகள் காரணமாக தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஒரு வார காலத்தில் இராமேஸ்வரம் மற்றும் மண்டபம் பகுதிகளை சேர்ந்த பதினாறு மீனவர்களையும் மூன்று விசைபடகுகளையும் இலங்கை கடற்படையினர் தடுத்து வைத்துள்ளனர்.

இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து இராமேஸ்வரம் விசைபடகு மீனவர்கள் இன்று இராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

பேட்டி : போஸ் – இராமேஸ்வரம் மீனவ சங்க தலைவர்

பேட்டி : ஜேசுராஜ் – இராமேஸ்வரம் விசைப்படகு மீனவ சங்க தலைவர்

இந்தக் கூட்டத்தில் இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் படகுகளை விடுவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

கடந்த 5 ந் திகதி கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் மீது புதிய வெளிநாட்டு மீன்பிடி தடை சட்டம் அமல்படுத்த இலங்கை அரசு முயற்ச்சித்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை வசமுள்ள தமிழக படகுகளுக்கு முழு நிவாரணம் வழங்க வேண்டும்.

டீசல் விலை அதிகரிப்பால் மீன்பிடி தொழில் பாதிப்படைவதால் டீசலின் விலை உயர்வை திரும்ப பெறவேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்ததில் ஈடுபட போவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நடவடிக்கை எடுக்க காலதாமதம் ஆகும் பட்சத்தில் ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, தஞ்சை, வேதாரணயம் உள்ளிட்ட ஜந்து மாவட்ட மீனவர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்த உள்ளதாக மீனவ அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தால் சுமார் 850 க்கும் மேற்ப்பட்ட விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டுள்ளன.

சுமார் 10 ஆயிரம் மீனவர்களும் 5 ஆயிரம் மீன்பிடி சார்பு தொழிலாளர்களும் வேலையிழக்கும் நிலை ஏற்ப்பட்டுள்ளது.

இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

(tamilnews indian fisherman nonstop protest tomorrow begins)

Tamil News Group websites