நவாலி சென்பீற்றஸ் தேவாலய கொடூர படுகொலையின் நினைவு நாள்!

0
754

வலிகாமம் பகுதியில் இலங்கை அரசினரால் முன்னேறிப் பாய்தல் (லீட் ஃபோர்வேட்) இராணுவ நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்ட நாளில் பலாலியில் இருந்தும் அளவெட்டியில் இருந்தும் ஷெல் தாக்குதல்களையும் குண்டுத்தாக்குதல்களையும் மக்கள் குடியிருப்புகளை நோக்கி மேற்கொண்டிருந்தனர். Navaly church bombing 150 People Killed Memorial Day

இதனால் மக்கள் உடுத்த உடையுடன் கையில் அகப்பட்ட பொருட்களுடன் கதறி அழுதபடி வெளியேறிக் கொண்டிருந்தனர்.

அன்றைய தினம் குடாநாட்டின் பல்வேறு வீதிகளினூடாக அகதிகளாக வெளியேறிய மக்கள் நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் கோயிலிலும் தாகம் தீர்ப்பதற்காக அமர்ந்து களைப்பாறினர். ஆலயங்கள் மீது என்றால் குண்டு போட மாட்டார்கள் என நம்பினர்.

அவ்வேளையில், யாழ். நகரப் பகுதியில் இருந்து அராலி நோக்கி வந்து கொண்டிருந்த புக்காரா விமானம் தொடர்ச்சியாக 13 குண்டுகளை மேற்படி இரு ஆலயங்கள் மீதும் வீசியது. மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் பலத்த சேதமடைந்தன.

நவாலிக்கிராமம் ஒரு கணம் அதிர்ந்து வீதிகள் தடைப்பட்டு, மரங்கள் முறிந்து வீழ்ந்து, வீடுகள் தரைமட்டமாகி, மதில்கள் வீழ்ந்து பாரிய புகை மூட்டம் காணப்பட்டது.

நவாலி சென்.பீற்றர்ஸ் தேவாலயமும் நவாலி சின்னக்கதிர்காம முருகன் ஆலயமும் மாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற தாக்குதலில் அதிர்ந்தன.

இத்தாக்குதலில் அப்பாவிக் குழந்தைகள், பெண்கள், வயோதிபர்கள் உட்பட 150 பேர் அந்த இடத்திலேயே மிகக் கொடூரமாக கொல்லப்பட்டனர். சுமார் 150-இற்கும் மேற்பட்டோர் படு காயமடைந்தனர்.

முன்னாள் ஜனாதிபதியான சந்திரிகா பண்டாரநாயக்காவின் பணிப்புரையின் பேரில் வலிகாமம் பகுதியில் ஷெல் ரொக்கட் தாக்குதலில் அதிர்ந்து கொண்டிருந்த வேளையில், விமானப்படையினால் நிகழ்த்தப்பட்ட மற்றுமொரு இனப்படுகொலையாகும்.

வரலாற்றில் இந்த இரத்தக்கறை படிந்த நாட்களை, நிகழ்வுகளை மறக்க முடியாது. தமிழினம் மறக்காது.

ஆண்டு தோறும் ஜூலை 9ம் நாள் நவாலி புனித பீற்றர்ஸ் ஆலயத்திலும், நவாலி சின்னக்கதிர்காமம் முருகன் ஆலயத்திலும் இந்த படுகொலைகளை நினைவுகூரும் வழிபாடுகள் நடாத்தப்பட்டு வருகின்றன.

மேலும் நவாலி வடக்கு சோமசுந்தரப் புலவர் வீதியிலும், நவாலி சென்.பீற்றர்ஸ் ஆலயப்பகுதியிலும் படுகொலைச் சின்னங்கள் அமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites