மன்னாரில் இன்றும் மனித எச்சங்கள் மீட்பு

0
252
Human remnants recovery today mannar

மன்னார் சதொச விற்பனை நிலைய வளாகத்தில் இன்றைய தினமும் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. (Human remnants recovery today mannar)

சதொச விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகள் இன்று 29 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த வளாகத்தின் முகப்பு பகுதியை மேலும் அகலப்படுத்தி ஆழப்படுத்தி அகழ்வு மேற்கொண்ட போது, அதிகளவிலான சிதறிய மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

முகப்பு பகுதிகளில் இன்னும் அதிகளவிலான மனித எச்சங்கள் காணப்படலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முகப்பு பகுதியை மேலும் ஆழப்படுத்தி ஆகழ்வு செய்வதற்கான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த அகழ்வு பணிகளின் போது சுமார் 30 க்கும் மேற்பட்ட முழுமையான, மற்றும் பகுதியளவிலான மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்டு வருகின்ற மனித எச்சங்கள் குறித்த வளாகத்திலே சுத்தப்படுத்தப்பட்டு இலக்கமிடப்பட்டு சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய பொதியிடப்பட்டு நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Human remnants recovery today mannar