சீன விவகாரம் : மஹிந்தவுக்கு எதிராக பிரேரணை

0
463
chinese funding mahinda election campaign Motion

தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மஹிந்த ராஜபக்ஷ பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது. (chinese funding mahinda election campaign Motion)

நாடாளுமன்றத்தில் எதிர்வரும், வியாழக்கிழமை இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வரும் என்று, அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசு மாரசிங்க தெரிவித்தார்.

கோத்தாபய ராஜபகஷசவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகள் குறித்த ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றை சமர்ப்பிப்பது குறித்தும், ஐதேகவின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
எனினும், வாரத்தில் ஒரு ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையைக் கொண்டு வரவே எமக்கு அனுமதி உள்ளது.

எனவே, நியூயோர்க் ரைம்ஸ் செய்தி தொடர்பாக முதலில் ஒத்திவைப்பு வேளை விவாதத்தை நடத்த முடிவு செய்துள்ளோம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:chinese funding mahinda election campaign Motion,chinese funding mahinda election campaign Motionchinese funding mahinda election campaign Motion,