அனைத்து படங்களையும் கலாய்க்கும் ’தமிழ்ப்படம் 2’ ஜூலை 12 இல் ரிலீஸா..!

0
39
Thamizhpadam 2 release date announced Tamil Movie,Thamizhpadam 2 release date announced Tamil,Thamizhpadam 2 release date announced,Thamizhpadam 2 release date,Thamizhpadam 2 release

சி.எஸ். அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா நடிக்கும் “தமிழ்ப்படம் 2” ஜூலை 12 ஆம் திகதி வெளியாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.(Thamizhpadam 2 release date announced Tamil Movie)

அதாவது, ”2011 நம்ம கையில…” என்ற பாடல் வரியோடு 2010 இல் வெளியான திரைப்படம் ”தமிழ்ப்படம்”. தமிழ் சினிமாவின் மொத்த வரலாறையுமே அடித்து துவைத்து காயப்போட்டு பரபரப்பை கிளப்பியது.

சி.எஸ். அமுதன் இயக்கத்தில், மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடித்து வெளிவந்த இந்த திரைப்படத்தின் அடுத்த பாகம் வருமா என்று ஏங்கிய ரசிகர்களுக்காகவே, இப்போது இரண்டாம் பாகம் “தமிழ்ப்படம் 2” என்ற பெயரில் தயாராகியுள்ளது.

மேலும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி முன்பு சிவா அமர்ந்து தியானம் பண்ணுவதுபோல் வெளியிடப்பட்ட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்து இப் படத்தின் வெற்றி ஆரம்பமாகியுள்ளதாக எடுத்துக் கொள்ளலாம்.

”Basically I am a watch mechanic” என்று எழுதப்பட்ட அட்டை மேசை மீது இருக்கும்போதே 24 படத்தின் சூர்யா போன்று ஒருவர் பேசிக்கலி ஐம் எ வாட்ச் மெக்கானிக் என்று சிவாவிடம் அறிமுகம் செய்யும் காட்சியோடு துவங்கும் புதிய வீடியோவும் டிரெண்ட் ஆகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ”பாகுபலி”, ”காலா” என்று பல படங்களின் போஸ்டர்களை ஸ்பூப் செய்ததன் மூலம் சி.எஸ். அமுதனின் படக்குழு கவனத்தை ஈர்த்துள்ளது.

இந் நிலையில், சி.எஸ் அமுதன் மற்றும் தயாரிப்பாளர் சஷிகாந்த்தின் ட்விட்டர் உரையாடல்கள் பட ரிலீசுக்கான முன்னோட்டமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.

ட்விட்டரில் சி.எஸ் அமுதன், ”12 ஆம் திகதி என்ன திட்டம்..?” என்று கேட்க, அதற்கு ”நான் ப்ரீயாக இருக்கிறேன் உங்களுக்கு படத்திற்கு போக விருப்பமா..?” என சஷிகாந்த் கேட்கிறார்.

மேலும், ”ஏதாவது சுவாராஸ்யமாக போகிறதா..?” என அமுதன் செய்யும் ரிப்ளைக்கு, ”சுவாரஸ்யமாக ஒன்று வரப்போகிறது… பார்க்கலாம்” என பதிலளித்துள்ளார்.

இதனடிப்படையில் பார்க்கும்போது ஜூலை 12 பட ரிலீஸ் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

மீண்டும் மலர்ந்தது ஓவியா -ஆரவ் காதல் : ஆதார புகைப்படம் உள்ளே..!

விபச்சாரத்தில் ஈடுபட்ட இளம் நடிகை அதிரடி கைது..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அனுமனும் மயில்ராவணனும் : திரை விமர்சனம்..!

மம்முட்டியின் பேரன்பு பட புரொமோ வீடியோ ரிலீஸ்..!

காற்றின் மொழி படம் மூலம் மீண்டும் சிம்புவுடன் இணைந்த ஜோதிகா..!

பிக் பாஸ் 2 பிரபலத்தை திருமணம் செய்து கொண்ட ஸ்ரீ ரெட்டி : பகீர் தகவல்..!

Tags :-Thamizhpadam 2 release date announced Tamil Movie

Our Other Sites News :-

நவோதய கிருஷ்ணா இன்று காலை சுட்டுகொலை : புறக்கோட்டையில் பதற்றம்