குகையில் சிக்கிய ஆறு சிறுவர்கள் மீட்பு – மீட்புப் பணியாளர் மரணம்

0
264
tamilnews Thai cave rescue site cleared help victims one died

(tamilnews Thai cave rescue site cleared help victims one died)

தாய்லாந்தின் சியாங் ராய் பகுதியில் உள்ள தாம் லுவாங் குகையை பார்வையிடச் சென்ற 12 சிறுவர்கள் மற்றும் அவர்களின் கால்பந்து பயிற்சியாளர் ஆகியோர் அண்மையில் குகையொன்றுக்குள் சிக்கிக்கொண்டனர்.

9 நாட்களின் பின்னர் அவர்கள் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து கடற்படை முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.

குகைக்குள் உள்ள சிறுவர்களுக்கு உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.

திடீரென பெய்த கடும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அந்த குகைக்குள் வெள்ளமும், சகதியும் புகுந்தது.

இதனால் வெளிச்சமும், வெளியேறும் வழியும் இல்லாமல் சிக்கியிருக்கும் அவர்களை மீட்பதற்கு கடும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

முழு பிரயத்தனத்துடன் மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில், உயிர்வாயு பற்றாக்குறையால் மீட்புக்குழு வீரர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் மீட்பு பணியில் பின்னடைவு ஏற்பட்டது. அதேசமயம் அந்தப் பகுதியில் மீண்டும் மழை பெய்யும் வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

எனவே, குகைக்குள் சிக்கியுள்ள 13 பேரையும் கூடிய விரைவில் மீட்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெள்ளம் சூழ்ந்த குகைக்குள் சிக்கி தவித்த 13 பேரில் 4 மாணவர்கள் மீட்கப்பட்டு, மீட்பு குழுவினரின் நிவாரண முகாமுக்கு திரும்பியுள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர், சுமார் ஒரு மணி நேரம் கழித்து மேலும் இரு மாணவர்கள் குகையில் இருந்து வெளியே வந்தனர்.

அவர்கள் அனைவரும் நோயாளர் காவு வாகனங்கள் மூலம் அவசரமாக வைத்தியசாலைகளுக்கு அழைத்துச் செல்லப்படும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன.

இவர்களை தொடர்ந்து குகைக்குள் உள்ள மேலும் 7 பேரும் விரைவில் வெளியே வருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

(tamilnews Thai cave rescue site cleared help victims one died)

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :