உல்லாசத்தின்போது திடீர் வலிப்பு ஏற்பட்டு காதலன் மரணம்; துக்கத்தில் காதலியும் தற்கொலை

0
215
suffered death love girlfriend committed suicide indiatamilnews

suffered death love girlfriend committed suicide indiatamilnews

உல்லாசமாக இருந்தபோது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததால் அதிர்ச்சி அடைந்த காதலி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னையில் உல்லாசமாக இருந்தபோது காதலனுக்கு வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துவிட்டதால் துக்கம் தாளாமல் காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை திருவொற்றியூரில் வசித்து வந்தவர் அஸ்வினி (20). சென்னை சட்டக்கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்தார். நாகை மாவட்டம் வேதாரண்யம் செட்டிபுலத்தைச் சேர்ந்தவர் தென்னவன் (24).

தென்னவனும் அஸ்வினியும் பேஸ்புக் மூலம் காதலித்து வந்தனர். இந்நிலையில் தென்னவன் சென்னை பூந்தமல்லியில் தங்கி அண்ணா நகரில் உள்ள ஐஏஎஸ் அகாதெமியில் பயிற்சி பெற்று வந்தார்.

இந்நிலையில் கடந்த மே 3-ஆம் தேதி அஸ்வினி வீட்டில் உள்ளவர்கள் கேரளாவுக்கு சென்றுவிட்டனர். இதனால் அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இதனால் காதலனை வீட்டுக்கு வரவழைத்துள்ளார்.

அப்போது இருவரும் உல்லாசமாக இருந்துள்ளதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென தென்னவனுக்கு வலிப்பு ஏற்பட்டதால் அவர் இறந்துவிட்டார். இதுதொடர்பாக திருவொற்றியூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தென்னவன் இறந்த துக்கத்தில் மனம் உடைந்து இருந்த அஸ்வினியை அவரது உறவினர் வீட்டில் பெற்றோர் தங்க வைத்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அந்த உறவினர் தனது குடும்பத்துடன் உறவினர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுவிட்டார்.

அப்போது வீட்டில் அஸ்வினி மட்டும் தனியாக இருந்துள்ளார். இரவு வீடு திரும்பிய உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவை திறக்காததால் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அஸ்வினி தூக்கில் தொங்கியபடி இருந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்து கதவை உடைத்து அஸ்வினியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். காதலன் இறந்த துக்கம் தாங்காமல் அஸ்வினி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

suffered death love girlfriend committed suicide indiatamilnews

இன்னும் பல சுவாரஸ்யமான செய்திகள் :

மேலதிக தமிழ் நியூஸ் இணையத்தளங்கள் :