மீனவர்களை தேடும் பணியில் இந்திய வானூர்தி

0
378
southern province fisher men search Indian air force

காலி மீனவ துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் சென்ற நிலையில் காணாமல் போன 7 மீனவர்களை, தேடும் பணியில் இந்திய வானூர்தி ஒன்று ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. southern province fisher men search Indian air force

கடற்றொழில் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

கடந்த 14 ஆம் திகதி கடலுக்கு சென்ற குறித்த மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

ஹிக்கடுவை, தெல்வத்தை, தொட்டகமுவ பிரதேசங்களை சேர்ந்த 26 வயதுக்கும் 51 வயதுக்கும் இடைப்பட்டவர்களே காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, குறித்த மீனவர்களை மீட்டுத்தருமாறு கோரி ஹிக்கடுவ, தொடகமுவ சந்தியில் ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

மீனவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஹிக்கடுவ, தொடகமுவயின் காலி வீதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
southern province fisher men search Indian air force

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites