மூத்த தமிழ் அரசியல்வாதி வேலனை வேணியன் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவிப்பு!

0
319

இலங்கையின் மூத்த அரசியல்வாதியும் கொழும்பு மாநகரசபையின் முன்னாள் உறுப்பினருமான வேலனை வேணியன் இன்று மாரடைப்பு காரணமாக காலமானர். Senior Tamil Politician Velani Veniyan Died 80 Age

80 வயதான வேலணை வேணியன் மூன்று தடவைகள் கொழும்பு மாநகர சபை உறுப்பினராக செயற்பட்டுள்ளார்.

இவர் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராக இருந்துள்ளார்.அத்துடன், ஜனநாயக மக்கள் முன்னணியின் பிரதித் தலைவராகவும், தமிழ் முற்போக்குக் கூட்டணியின் இணை உப தலைவராகவும் வேலனை வேணியன் பதவி வகித்தார்.

இதேவேளை, ஜனநாயக மக்கள் முன்னணியியிலிருந்து அண்மையில் விலகிய வேலனை வேணியன் நவோதயா மக்கள் முன்னணியுடன் இணைந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவரின் மறைவுக்கு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் , சனநாயக மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பிரபா கணேசன் மற்றும் பல அரசியல்வாதிகள் தமது இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites