வேறு முதலமைச்சர்களுக்கு கிடைக்காத சலுகை விக்கினேஷ்வரனுக்கு – விபரமாக வௌியானது அந்த விடயங்கள்….!

0
104
north province chief minister vickneshwaran decide several party contest

வட மாகாண முதலமைச்சர் சி வி விக்கினேஷ்வரன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான விமான பயணத்திற்கு இதுவரை 22 இலட்சத்து 61 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. northern province chief minister aero plane travel detail

வட மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் சந்திரசிறியிடம் பெற்றுக்கொண்ட விசேட அனுமதிக்கமைய அவருக்கு விமான பயணத்திற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

மாகாணங்களில் மேற்கொள்ளப்படும் பல்வேறு வேலைதிட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து குறித்த செலவினங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாகனத்தில் கொழும்பு சென்றுவந்த நிலையில் முன்னாள் ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தான் கொழும்பிற்கு விமானம் மூலமே சென்று வருவதனால் முதலமைச்சரின் பயணத்திற்கும் மாகாணத்திற்கு ஒதுக்கீடு செய்யும் அரச நிதியில் அனுமதிக்கலாம் என விசேட அனுமதியினை வழங்கினார்.

மகிந்த ராஜபக்சவினால் வழங்கப்பட்ட இந்த அனுமதியின் பிரகாரம் 2014ம் ஆண்டு முதல் 2017ம் ஆண்டு வரையான 4 ஆண்டுகளில் வடக்கு மாகாண முதலமைச்சர் அரச செலவில் 48 தடவைகள் விமானம் மூலம் கொழும்பிற்கு சென்று வந்துள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் முதலமைச்சர் 2014ம் ஆண்டில் 11 தடவைகளும் , 2015ம் ஆண்டில் 13 தடவைகளும் , 2016ம் ஆண்டில் 15 தடவைகளும் விமான பயணங்களை மேற்கொண்டுள்ளதோடு, 2017ம் ஆண்டில் 9 தடவைகள் விமானத்தில் பயணம் செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் அடிப்படையில் 2014 , 2015ம் ஆண்டுகளில் ஓரு சேவைக்காக 35 ஆயிரம் ரூபாவீதம் பணம் செலுத்தப்பட்ட நிலையில் 2016ம் ஆண்டு முதல் இன்றுவரையில் ஓர் சேவைக்காக 58 ஆயிரம் ரூபா வீதம் பணம் செலுத்தப்படுகின்றது. இதேநேரம் இலங்கையில் உள்ள 9 மாகாணங்களில் வேறு எந்த மாகாண முதலமைச்சரிற்கும் குறித்த சலுகை தற்போதுவரையில் வழங்கப்படுவது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
northern province chief minister aero plane travel detail

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites