வடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்!

0
443

வடக்கு மாகாண சபையில் நிலவிய ஊழல் குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்ய முதலமைச்சர் விக்கினேஸ்வரன் நியமித்த விசாரணைக்குழு வழங்கிய பரிந்துரைகளின் அடிப்படையில் மீன்பிடி மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் பா டெனிஸ்வரன் உட்பட நான்கு அமைச்சர்கள் தமது பதவிகளை இழந்தமை அறிந்ததே. North Province Chief Minister Wigneswaran File High Court Case

இந்த விடயம் தொடர்பில் அமைச்சர் டெனீஸ்வரன் தொடுத்திருந்த வழக்கில், முதலமைச்சர் விக்கினேஸ்வரன் டெனிஸ்வரனை பதவி நீக்கியமை செல்லாது என மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

டெனிஸ்வரனின் மேன்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதியரசர்கள் விக்ரமசிங்க, ஜனக டி சில்வா ஆகியோரைக் கொண்ட அமர்வு -கடந்தவாரம் வழங்கிய இடைக்கால உத்தரவில், டெனீஸ்வரனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கிய முதலமைச்சர் விக்னேஸ்வரனின் உத்தரவு செல்லுபடியற்றது என்றும், அவர் தொடர்ந்தும் அமைச்சராகவே இருப்பதாக கருதப்படுகிறார் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு முதலமைச்சர் பதவியில் உள்ள அதிகார சிக்கல்கள் தொடர்பில் பல கேள்விகளை எழுப்பிவிட்டிருந்தது. முதலமைச்சர் என்பவர் சொந்த சபையில் அமைச்சர்களை நீக்கும் அதிகாரம் அற்ற ஒரு பொம்மை பதவி நிலை என்னும் கருத்து வலுவடைந்து வந்தது.

மறுபக்கத்தில் முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் முடிவெடுக்கும் சாதுரியம் தொடர்பில் அவரின் எதிர்ப்பாளர்கள் பலவிதமான கருத்துகளை பரப்பி வந்தனர்.

இந்நிலையில் இந்த விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விக்கினேஸ்வரன் தன் மீது திணிக்கப்பட்டுள்ள விபரீத கருத்துக்களுக்கு முடிவு கட்டும் வகையில் தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால உத்தரவுக்கு எதிராக, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் டெனிஸ்வரனுக்கு சாகமான தீர்ப்பை வழங்கிய பின்னர் , உங்களுடன், அமைச்சர்கள் வாரியத்தில் உள்ள அமைச்சர்கள் ஐவரும் யார் என்று எழுத்து மூலம் அறிவிக்குமாறு வட மாகாண ஆளுனர் றெஜினோல்ட் குரே, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார்.

இதற்கு வடக்கு மாகாண முதலமைச்சர் இன்னமும் பதிலளிக்கவில்லை.

இந்தநிலையிலேயே, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுக்கு எதிராக, முதலமைச்சர் தரப்பில் மனுவொன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, முதலமைச்சர் விக்னேஸ்வரனுக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கின் விசாரணை நாளை மீண்டும் நடைபெறவுள்ளது.

ஏற்கனவே வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்பில் கடும் விசனம் தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் , முதலமைச்சருக்கும் அமைச்சருக்கும் இடையில் நிலவி வரும் இந்த அதிகார போட்டி பலராலும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.

வடக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்படும் அபிவிருத்தி நிதி தொடர்ந்தும் எவ்வித பயன்படும் இன்றி திரும்பி செல்லும் நிலையில் வடக்கு மாகாண சபை விரைவில் தனது ஆட்சி காலத்தை நிறைவு செய்யவுள்ளது. அடுத்த முதலமைச்சர் யார் என பலதரப்பட்ட தெரிவுகள் கூறப்பட்டு வந்தாலும் விக்கினேஸ்வரனுக்கு அடுத்த தேர்தலிலும் நிலைத்து நிற்க வேண்டிய தேவை உள்ளதால் , இந்த அதிகார போட்டியில் வெல்வதன் மூலமே தனது பலத்தை நிரூபணம் செய்யலாம்.

முதலமைச்சர் உச்ச நீதிமன்றில் தொடர்ந்துள்ள வழக்கு மூலம் முதலமைச்சர் தன்னை நிருபிப்பாரா பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites