ஜெம்பட்டா வீதியில் கடும் துப்பாக்கிச் சூடு: பெண் உட்பட இருவர் பலி

0
348
person injured gunmen motorcycle opened fire Jampata Kotahena

 

கொழும்பு, கொட்டாஞ்சேனை ஜெம்பட்டா வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். Kotahena Shooting Incident

அதில் ஒருவர் பெண் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் இரண்டு பேர் இத்துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்துள்ளனர். அவர்கள் தற்போது வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொட்டாஞ்சேனை, கொச்சிக்கடை மற்றும் ஜெம்பட்டா வீதி பகுதிகளில் கடந்த சில காலங்களாக குழுக்கள் சிலவற்றுக்கிடையே மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

அதன் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் பழிவாங்கும் நடவடிக்கைகளின் அங்கமாக இன்றைய சம்பவம் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அங்கு தொடர்ச்சியாக துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. இச்சம்பவங்கள் அப்பகுதி மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளன.