பாலியல் சித்திரவதைக்குள் ஈழ அகதிகள்; அமெரிக்கா அதிர்ச்சித் தகவல்

0
299
Eelam refugees sexual torture india

இந்தியா தமிழ்நாட்டிலுள்ள ஈழத் தமிழ் அகதிகள் பாலியல் பலாத்கார சித்திரவதைகளை எதிர்நோக்குவதாக அமெரிக்காவின் 2018 ஆம் ஆண்டுக்கான ஆட்கடத்தல் அறிக்கை தகவல் வெளியிட்டுள்ளது. (Eelam refugees sexual torture india)

இதேவேளை, இலங்கையில் உள்ள பெண்களும் பாலியல் வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அனுப்பப்படுவதாகவும் அமெரிக்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான், ஈரான், பிலிப்பைன்ஸ் பெண்களும் இந்த வர்த்தகத்துக்கு பயன்படுத்தப்படுவதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் அதிக சம்பளம் என்ற போர்வையில் இந்த வர்த்தகம் மேற்கொள்ளப்படுவதாகவும் இந்தியாவில் உள்ள ஈழத் தமிழ் மற்றும் ரோஹிங்கியா அகதி பெண்கள் மத்தியில் பாலியல் பலாத்கார தொந்தரவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags; Eelam refugees sexual torture india