மது போதையில் தினமும் குடும்பத்திற்கு தொல்லை கொடுத்தவருக்கு நீதிமன்றம் வழங்கிய வித்தியாசமான தண்டனை

0
174
daily drink person torture family member different judgment

மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்ட நபருக்கு யாழ் நீதிமன்றத்தினால் வித்தியசமான தண்டனை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. daily drink person torture family member different judgment

குறித்த நபரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இந்த நபர் தினமும் மதுபோதையில் வந்து வீட்டிலுள்ளவர்களுடன் தர்க்கத்தில் ஈடுபடுவதுடன், தாயையும் தாக்குவார் என்று கூறப்பட்டது.

முன்னர் ஒரு தடவையும் அவர் நீதிமன்றால் எச்சரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தைக் கவனத்தில் எடுத்த நீதிமன்று, அவரை 200 மணித்தியாலங்கள் சமூக சேவையில் ஈடுபடுத்துமாறு சமுதாயம் சார் சீர் திருத்தல் திணைக்களத்துக்கு உத்தரவிட்டது.
daily drink person torture family member different judgment

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites