பிரபாகரன் தொடர்பில் கதைத்து விமர்சனத்திற்குள்ளான மனோ கணேசனின் அடுத்த கருத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில்…..!

0
109
naguleswaram thirukethiswaram rhirukoneshwaram should change mano

நாடாளுமன்ற உறுப்புரிமை பெற்றுள்ள 225 பேரில் 50 பேர் மாத்திரமே நாடாளுமன்றில் அங்கம் வகிப்பதற்கு தகுதியானவர்கள் ஏனையவர்கள் தகுதியற்றவர்கள் எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார். minister mano ganeshan criticize parliament members latest news

பாணத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களாவதற்கான தகுதி காணப்படுகின்ற போதிலும் பலர் விருப்பமின்றி வெளியில் இருக்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாட்டினை கட்டியெழுப்பும் பொறுப்பினை 50 பேரை தவிர வேறு எவருக்கும் வழங்க முடியாது எனவும் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அண்மையில் பிரபாகரன் தொடர்பில் கருத்;துக்களை வெளியிட்டு விமர்சனங்களை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரபாகரனே வருகை தந்து தமிழ் மக்களிடத்தில் ஆயுதம் கொடுத்தாலும் தமிழ் மக்களை அவரை அடித்து விரட்டுவார்கள் என தெரிவித்தமைக்கே பலரின் விமர்சனங்களை பெற்றுக்கொண்டார்.
minister mano ganeshan criticize parliament members latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites