சர்சைக்குள்ளான சர்கார் பட போஸ்டர் நீக்கம்..!

0
132
Vijays Sarkar film controversial poster removed,Vijays Sarkar film controversial poster,Vijays Sarkar film controversial,Vijays Sarkar film,Vijays Sarkar
Photo Credit : Google Image

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், விஜய் நடிக்கும் “சர்கார்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்பட போஸ்டருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், அதனை ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இருந்து சன்பிக்சர்ஸ் நீக்கியள்ளது.(Vijays Sarkar film controversial poster removed)

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் மீண்டும் நடிக்கும் படம் ”சர்கார்”. ஏ.ஆர். ரகுமான் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீா்த்தி சுரேஷ் நடிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், பழ.கருப்பையா, யோகிபாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிகின்றனர்.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை, ஜூன் 21ஆம் திகதி அன்று படக்குழு வெளியிட்டது. ஸ்டைலாக விஜய் புகைபிடிப்பது போன்றும், காரில் அமர்ந்து லேப்டாப் பார்ப்பது போன்றும் என இரண்டு போஸ்டர் வெளியிடப்பட்டது.

இதில், விஜய் புகைப்பது போன்ற போஸ்டர் மிகுந்த சர்ச்சைக்குள்ளானது. குறிப்பாக இளைஞரணி அன்புமனி ராமதாஸ், பாமக தலைவர் ராமதாஸ் ஆகியோர் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்தனர்.

நடிகர் விஜய் சமூக அக்கறை உள்ளவராக இருந்தால் இந்த போஸ்டரை உடனடியாக நீக்க வேண்டும் என்று பாமக ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். இதனைத்தொடர்ந்து தமிழக பொது சுகார துறையின் கீழ் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுபாட்டுப் பிரிவு போஸ்டரை நீக்ககோரி நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கும் நோட்டீஸ் அனுப்பியது.

இதில் தமிழக அரசு புகையிலை பழக்கத்தை மக்களிடமிருந்து ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கு முதற்கட்டமாக திரையுலகினரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டது.

அதற்கிணங்க சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் இருந்து விஜய் புகைக்கும் போஸ்டரை நீக்கியுள்ளது.

Photo Credit : Google Image

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

பாடகராக அவதாரம் எடுத்த நயனின் காதலர் : களைகட்டும் கோலமாவு கோகிலா..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

ஜோதிடரால் பெரும் சிக்கலில் மாட்டிய பிரியங்கா சோப்ரா..!

குடிபோதையில் கார் ஓட்டிய நடிகர் மனோஜ் மீது வழக்கு..!

சிம்புவுக்கு ஜோடியான ஜான்வி : விரைவில் அதிகாரபூர்வ தகவல்..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Vijays Sarkar film controversial poster removed

Our Other Sites News :-

ETI பணிப்பாளர்கள் வெளிநாடு செல்ல தடை – நால்வருக்கு நீதிமன்ற அழைப்பாணை