மஹிந்த ராஜபக்ஷவின் 112 கோடி சர்ச்சை – ஐ.தே.க நியூயோர்க் டைம்ஸிடம் ஆதாரங்களை கோருகிறது

0
354
UNP New York Times report $112 million China fund Mahinda

(UNP New York Times report $112 million China fund Mahinda)

ஜனாதிபதி தேர்தலின் போது சீனாவினால் மஹிந்த ராஜபக்ஷவிற்கு 112 கோடி ரூபா வழங்கப்பட்ட விவகாரம் குறித்து நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் ஐக்கிய தேசிய கட்சி ஆதாரங்களை கோரியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் நாடாளுமன்ற உரையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனவே, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ விளக்கமளிக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவிற்கு சீனா நிதி வழங்கியமை தொடர்பாக வெளியிட்ட செய்தியின் மூலங்களை தருமாறு நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உத்தியோகப்பூர்வமாக கோரப்பட்டுள்ளது.

சட்டவிரோத நிதி பரிமாற்றம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்வதற்கும், சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் செய்தி தொடர்பான மூலங்கள் மிகவும் அவசியமாகின்றது என நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்ஷவிற்கு 7.6 பில்லியன் டொலர்களை சீனா வழங்கியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ள நிலையிலேயே ஐக்கிய தேசிய கட்சி நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையிடம் உதவி கோரியுள்ளது.

(UNP New York Times report $112 million China fund Mahinda)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites