தமிழ் மக்களுக்காக பதவி விலகியது தனக்கு பெருமையே….!

0
282
state minister wijayakala maheshwaran interview Sinhalese news paper

அமைச்சு பதவியிலிருந்து தாம் விலகியதை நினைத்து வருத்தப்படவில்டலை என நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்தார். state minister wijayakala maheshwaran interview Sinhalese news paper

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

அமைச்சு பதவியிலிருந்து நீக்கப்பட்டாலும், அரசியலிலிருந்து தன்னை ஒருபோதும் நீக்க முடியாது என அவர் குறிப்பிட்டார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்படுவது அவசியம் என கருத்து தெரிவித்தமையால் விஜயகலா மகேஸ்வரன் பாரிய சர்ச்சைக்கு உள்ளாகினார். அதன் பின்னர் அவர் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்தார்.

விடுதலை புலிகள் அமைப்பு மீண்டும் வர வேண்டிய அவசியம் குறித்து ஏன் கூறினீர்கள் என விஜயகலாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இது தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற விசாரணைகளில் தெரியவரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

உங்கள் கணவர் மகேஸ்வரனை விடுதலை புலிகள் அமைப்பு கொலை செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அவ்வாறான அமைப்பு மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதில் என்ன நியாயம் உள்ளதென அவரிடம் குறித்த ஊடகம் வினவியுள்ளது. இதற்கு பதிலளிப்பதில் பயனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க கடவுள் உள்ளார் என விஜயகலா மகேஷ்வரன் மேலும் தெரிவித்துள்ளார்.
state minister wijayakala maheshwaran interview Sinhalese news paper

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites