பைசர் முஸ்தப்பா காட்டிக்கொடுப்பதை நிறுத்த வேண்டும்

0
315
minister fizer mustaffa stop new election method Muslim society

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா பாராளுமன்றத்தில் ஆற்றிய உரை முஸ்லிம்களிடத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதா தெரிவிக்கப்பட்டுள்ளது. minister fizer mustaffa stop new election method Muslim society

‘தேசிய கட்சிகளில் தொங்கிக் கொண்டு இனவாதத்தைப் பரப்பி வாக்குகளைப் பெற்று தமது உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரித்துக் கொள்ளும் சிறுபான்மைக் கட்சிகள் சில, புதிய முறையில் தமது பங்கு கிடைக்காது போய்விடும் என்பதாலேயே மீண்டும் பழைய முறைக்குச் செல்ல வேண்டும் எனக் குரல்கொடுத்து வருகின்றனர்.

புதிய முறையில் எந்தவொரு இனத்துக்கும் அநீதி இழைக்கப்படாது. அரசியல் செய்யும்போது தாம் சார்ந்த இனத்தைப் பற்றி மாத்திரம் யோசிக்கக் கூடாது.

அப்படி யோசிப்பதாயின் தனித்துப் போட்டியிட வேண்டும். இதனைவிடுத்து தேசிய கட்சிகளில் உறுப்பினர்களைப் பெற்ற பின்னர் தமது இனத்தை விற்று அரசியல் நடத்துகின்றனர்.

உத்தேச தேர்தல் முறையின் ஊடாக முஸ்லிம் சமூகத்தின் வாக்குவங்கி குறைவடையாது’ என பைசர் முஸ்தபா சபையில் நடைபெற்ற விவாதத்தின் போது தெரிவித்துள்ளார்.

புதிய தேர்தல் முறையின் கீழ் மாகாண சபைகளிலிருந்து 13 பேர் மாத்திரமே முஸ்லிம்களிடமிருந்து தெரிவாகுவதோடு, பழைய தேர்தல் முறையின் கீழ் 43 பேர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இப்படி முஸ்லிம்களுக்கு மிகத்தெளிவான அநீதி இழைக்கும், புதிய தேர்தல் முறையை பைசர் முஸ்தபா வலியுறுத்துவதானது, அவரது உடம்பில் ஓடுவது முஸ்லிம் இரத்தமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தனக்குக் கிடைத்த தேசியப் பட்டியல் ஆசனத்திற்காகவும், மைத்திரிபால சிறிசேன மற்றும் சிங்களத் தரப்புகளிடம் நல்ல பெயர் பெறுவதற்காகவும் இதுபோன்ற பேச்சுக்களை பேசும் பைசர் முஸ்தபா, போன்றவர்கள் முஸ்லிம் சமூகத்திற்கு செய்யும் வரலாற்றுத் துரோகமாகவே இது நோக்கப்படும்

பைசர் முஸ்தபா, முஸ்லிம் சமூகத்திற்கு எதுவும் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. தயவுசெய்து சிங்களவர்களுக்கு முஸ்லிம்களை காட்டிக்கொடுப்பதை அவர் நிறுத்த வேண்டும்

தனது உடம்பிலிருந்து சில அவயங்களை இழக்க பைசர் முஸ்தபா தயாரா..? இதற்கான பதில், அவரிடமிருந்து இல்லை என்பதாகவே இருக்கும். அதுபோன்றுதான் முஸ்லிம் சமூகமும் மாகாண சபையில் தனது பிரதிநிதித்துவத்தை இழக்கத் தயாரில்லை.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ச சுமந்திரன் உள்ளிட்டவர்கள் கூட, எந்த முறையிலாவது மாகாணத் தேர்தலை நடத்துவதற்கு தாம் தயாரென சொல்லும் நிலையில், முஸ்லிம்களுக்கு பாதகமான புதிய முறையின் கீழ்தான் மாகாணத் தேர்தலை நடத்த வேண்டுமென, பைசர் முஸ்தபா பிடிவாதம் பிடிப்பதன் காரணம்தான் என்ன..? என முஸ்லிம் சமூகம் பைசர் முஸ்தபாவிடம் வினா எழுப்புகிறது…!
minister fizer mustaffa stop new election method Muslim society

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites