பிரபாகரனை தமிழ் மக்கள் அடித்தே விரட்டுவார்கள் : மனோ

0
760

வடக்கு மக்களிடையே பிரபாகரனே எழுந்து வந்து மீண்டும் ஆயுதத்தை கையில் கொடுத்தாலும், அந்த மக்கள் அவரை அடித்துத் துரத்துவார்கள் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.(mano ganesan vijayakala maheswaran )

இதற்காக, அங்கு பொலிஸாரோ இராணுவமோ செல்ல வேண்டியும் ஏற்படாது எனவும் அமைச்சர் மேலும் கூறினார்.

புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து குறித்து நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையில் அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆரம்பத்தில் விஜயகலாவுக்கு ஆதரவான கருத்துக்களை முன்வைத்து வந்த அமைச்சர் மனோ கணேசன் தற்போது விஜயகலாவுக்கு எதிரான கருத்துக்களை ஊடகங்கள் முன் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites

Tags:mano ganesan vijayakala maheswaran ,mano ganesan vijayakala maheswaran ,mano ganesan vijayakala maheswaran ,