ரணில் கைவிட்டு சென்ற கருணாவை காப்பாற்றியது மகிந்தவே! காமினி லொக்குகே கிளப்பிவிட்டுள்ள சர்ச்சை!

0
539

நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் விடுதலைப்புலிகள் தொடர்பில் தெரிவித்த கருத்து தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் உரையாற்றிய வேளை மகிந்த அரசு கருணாவுக்கு அமைச்சு பதவி வழங்கியமை பற்றி கூறியிருந்தார். Mahinda helps LTTE Karuna Opposition party member Gamini Lokuge

கருணாவுக்கு அமைச்சர் பதவியை கொடுத்து, கட்சியின் உப தலைவர் பதவியையும் மகிந்த வழங்கியதாகவும் ரணில் விக்ரமசிங்க கூறினார்.

எனினும் கருணாவை கொழும்பு அழைத்து வந்தது யார் என்பதை ரணில் விக்ரமசிங்க மறந்து விட்டாரா என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் காமினி லொக்குகே கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,

ரணில் விக்ரமசிங்கவே அலிசாகிர் மௌலானா மூலம் கருணாவை கொழும்புக்கு அழைத்து வந்து ஜெய்க் ஹில்டன் ஹொட்டலில் தங்க வைத்து, அலரி மாளிகையில் சாப்பாடு வழங்கினார்.

உயிர் அச்சம் காரணமாக இறுதியில் அலிசாகிர் மௌலான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை கைவிட்டு நாட்டை விட்டு தப்பிச் செல்ல நேர்ந்தது.

இந்த நிலையில் அநாதரவாக கைவிடப்பட்ட கருணாவை மகிந்த ராஜபக்சவே காப்பற்றினார். அதேபோல் விடுதலைப் புலிகளுக்கு பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றதாகவும் பிரதமர் ரணில் கூறினார்.

யார் விடுதலைப் புலிகளுக்கு பணம் கொடுத்தது? ரணில் விக்ரமசிங்கவும், அன்றைய நிதியமைச்சின் செயலாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுமே புலிகளுக்கு பணத்தை கொடுத்தனர் என காமினி லொக்குகே தெரிவித்தார்

கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites