நீண்டநாள் கோரிக்கைக்கு நிரந்தர தீர்வு

0
101
long term request receive decision mannar hospital Tamil news

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் சேவைக்கு அமர்த்தப்படாததோடு மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில், தற்போது நிரந்தரமாக மகப்பேற்று,பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்தார். long term request receive decision mannar hospital Tamil news

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் நீண்ட காலமாக மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையினால் கர்ப்பிணித் தாய்மார்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

மகப்பேற்று, பெண்ணியல் நோய் வைத்திய நிபுணர் இல்லாமையினால் மகப்பேற்றிற்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு வரும் கர்ப்பிணித்தாய்மார்கள்,மன்னார் மாவட்ட வைத்தியசாலையிலிருந்து வவுனியா அல்லது பிரிதொரு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு மாற்றப்படுகின்றனர்.

இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வந்தனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையிலிருந்து வவுனியா வைத்தியசாலைக்கு அம்பியூலன்ஸ் வண்டி மூலம் அழைத்துச் செல்லப்பட்ட கர்ப்பிணித்தாய்மர்கள் சிலர் அம்பியூலன்ஸ் வண்டியிலேயே குழந்தைகளை பிரசவித்த சம்பவங்களும் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில் மக்கள் தொடர்ச்சியாக எதிர்ப்பு போராட்டங்களையும் முன்னெடுத்து வந்தனர்.

குறித்த பிரச்சினை தொடர்பாக பல தடைவ மத்திய சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தியதோடு,தொடர்ந்தும் அழுத்தங்களை கொடுத்தோம்.

இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு புதிய மகப்பேற்று,பெண்ணியல் வைத்திய நிபுணர் ஒருவர் தற்போது நிறந்தரமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
long term request receive decision mannar hospital Tamil news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites