உயர்மட்டத்தில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு உயர் மட்டத்தில் உள்ளவர்களே சாட்சியாளர்கள்

0
88
government person arrest corruption spot action police pannipitiya

ஊழல் மோசடிகளற்ற நாட்டின் முன்னேற்றத்திற்கு அரச பணியாளர்கள் அவசியம் என ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார். bribery commission request government staff immediately

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

உயர்மட்டத்தில் இடம்பெறுகின்ற மோசடிகளுக்கு உயர் மட்டத்தில் உள்ளவர்களே சாட்சியாளர்களாக இருப்பர்.

அத்தகையவர்கள் ஒருபோதும், ஊழல் மோசடிகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்க முன்வருவதில்லை.

கீழ்மட்டத்தில் உள்ள சமூகத்திலும் இத்தகைய மோசடிகள் இடம்பெறுகின்றன.

கீழ்மட்டத்தில் அரச பணியாளர்கள் மேற்கொள்ளும் மோசடிகள் சிறிதாக இருப்பினும், அவற்றை ஒருங்கிணைத்து நோக்குகின்றபோது அவையும் பல பில்லியன் ரூபாய்கள் அளவிற்கு பாரியதாக உள்ளன.

எனவே, மோசடிகள் தொடர்பில் பாரபட்சம் இன்றி அனைத்துக்கும் சம அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும் என ஊழல் மோசடி விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சரத் ஜயமான்ன தெரிவித்துள்ளார்.
bribery commission request government staff immediately

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites