இலங்கை தமிழர்களை கொன்று புதைத்தவரின் காணியில் மேலும் பலருடைய எலும்புகள்

0
291
body parts recover Canada one men arrest latest news

கனடாவில் இரண்டு இலங்கை தமிழர்கள் உட்பட்ட பலரை கொலை செய்தார் என சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவருக்கு சொந்தமான காணியில் இருந்து மேலும் பல மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. body parts recover Canada one men arrest latest news

மெக் ஆத்தர் என அழைக்கப்படும் 58 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசாரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளாhர்.

அவர் மீது தற்போதுவரை 8 கொலைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் அவருக்கு சொந்தமான காணிப்பகுதிகளில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன்போதே மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு வருவதாக கனேடிய செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்று முன்தினம் அந்தப் பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதனையடுத்து நேற்று மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின்போது மேலும் பல மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

எனினும் அந்த மனித எச்சங்கள் யாருடையவை என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

இந்த நிலையில் அகழ்வுப் பணிகள் இடம்பெறும் பகுதியில் மோப்ப நாயின் உதவியுடன் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அத்துடன் கனேடிய காவல்துறையினர் தொடர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அந்நாட்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
body parts recover Canada one men arrest latest news

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites