(blackberry ghost might large 4000 mah battery news)
பிளாக்பெரி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கோஸ்ட் என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பெசல்-லெஸ் டிஸ்ப்ளே கொண்ட பிரீமியம் மாடலாக இருக்கும் என @evleaks வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெட்டல் ஃபிரேம், வளைந்த கார்னர்கள், சிம் ஸ்லாட் மற்றும் ஆன்டெனா கட்-அவுட்கள் போனின் பக்கவாட்டில் பொருத்தப்பட்டு இருக்கிறது. இதன் செல்ஃபி கேமரா ஸ்மார்ட்போனின் இயர்பீஸ்-இன் மேல் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் புதிய பிளாக்பெரி ஸ்மார்ட்போன் 4000 mah பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதே நிறுவனம் பிளாக்பெரி Pxdm ஸ்மார்ட்போனினை வடிவமைத்து, உற்பத்தி செய்து விற்பனையும் செய்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா மட்டுமின்றி நேபால், இலங்கை மற்றும் வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் விற்பனை செய்தது.
blackberry ghost might large 4000 mah battery news