சர்கார் பட போஸ்டர் : விஜய்க்கு எதிராக நோட்டீஸ்..!

0
60
Vijays Sarkar movie poster health department notice,Vijays Sarkar movie poster health department,Vijays Sarkar movie poster health,Vijays Sarkar movie poster,Vijays Sarkar movie

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ”சர்கார்” பட போஸ்டரில் இடம்பெற்றுள்ள புகைப்பிடிக்கும் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கூறி நடிகர் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் உள்ளிட்டோருக்கு பொதுசுகாதாரத் துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.(Vijays Sarkar movie poster health department notice)

அதாவது, விஜய் நடித்துவரும் புதிய படத்துக்கு ”சர்கார்” என பெயரிடப்பட்டுள்ளது. இப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

மேலும் ராதாரவி, பழ.கருப்பையா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்துக்கான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் 21-ஆம் திகதி வெளியிடப்பட்டது. அதில், நடிகர் விஜய் புகைப்பிடிப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த போஸ்டருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ஆகியோர் கண்டனம் தெரிவித்து வந்தனர்.

இது இப்படியிருக்க, நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சியை வெளிப்படுத்தக்கூடிய அந்த போஸ்டரை யூடியூப் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களில் இருந்தும் நீக்க வேண்டும் சன் பிக்சர்ஸ் தலைவர் கலாநிதிமாறன், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் முருகதாஸ் ஆகியோருக்கு தமிழக சுகாதாரத்துறை பிரிவில் இயங்கும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், புகைப்பழக்கத்தை இளைஞர்களிடமிருந்து அறவே ஒழிக்க அரசு மேற்கொண்டுவரும் முதல்கட்ட முயற்சிக்கு திரையுலகினர் ஒத்துழைக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

Tags :-Vijays Sarkar movie poster health department notice

Our Other Sites News :-

பெற்றோர் , டீசல் விலைகள் அதிகரிப்பு!