வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்து போலீசில் சிக்கிய சீரியல் நடிகை..!

0
41
Tv Actress fake currency case arrested,Tv Actress fake currency case,Tv Actress fake currency,Tv Actress fake,Tv Actress
Photo Credit : Google Image

வீட்டில் வைத்து கள்ளநோட்டு அடித்த மலையாள டிவி சீரியல் நடிகை, அவரது தாய், சகோதரி ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.(Tv Actress fake currency case arrested)

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.. :-

மலையாள தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் சூர்யா சசிகுமார்(36). கொல்லத்தில் தனது தாய் ரமா தேவி (56), தங்கை ஸ்ருதி (29) ஆகியோருடன் வசித்து வந்த இவர் தனது வீட்டின் மாடிப் பகுதியில் கள்ள நோட்டு அடித்து வந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனக்கரா பகுதியில் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்ட கிருஷ்ணகுமார், லியோ சாம், ரவீந்திரன் உள்ளிட்டோரை கடந்த ஞாயிற்றுக்கிழமை போலீசார் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் சூர்யாவின் வீட்டில் சோதனை நடத்தினார்கள்.

மேலும், சூர்யாவின் வீட்டில் இருந்த ரூ. 57 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கள்ள நோட்டுகள் அடிக்க அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

அத்துடன் கள்ள நோட்டுகள் அடித்த குற்றத்திற்காக சூர்யா, ரமா தேவி, ஸ்ருதி ஆகியோரை போலீசார் கடந்த 3 ஆம் திகதி கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கள்ள நோட்டு அடித்ததில் முக்கிய மூளையாக ரமா தேவி செயல்பட்டு வந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். கள்ள நோட்டுகளை அச்சடிக்க தேவையான எந்திரங்களை வாங்க ரமா ரூ. 4.36 லட்சம் கொடுத்ததும் தெரிய வந்துள்ளது.

மேலும், அச்சடித்தும் அடிக்காமலும் இருந்த நோட்டுகள், நோட்டுகளை அடிக்கத் தேவையான பொருட்கள் என்று பறிமுதல் செய்யப்பட்டவற்றின் மதிப்பு ரூ. 7 கோடி என்று போலீஸ் அதிகாரி வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

<MOST RELATED CINEMA NEWS>>

பாகுபலி சிவகாமி கேரக்டர் குறித்த திரைப்படம் : மூன்று பாகங்களாக இயக்க திட்டம்..!

ஆயிரம் அடிக்கு மேல் பறந்தவாறு பேஸ் பால் விளையாட்டை பார்த்து ரசித்த திரிஷா..!

மீண்டும் தயாராகும் சிம்புவின் மன்மதன் அம்பு..!

யாஷிகாவை கட்டிப்பிடித்து ரொமான்ஸ் பண்ணும் மகத் : காறித்துப்பிய பாலாஜி..!

திருமணத்துக்குப் பின் சினிமாவை விட்டு விலக வேண்டிய அவசியம் இல்லை : சமந்தா பேட்டி..!

அப்பா, மகள் என்றாலும் ஒரு லிமிட் வேண்டாமா..? : ஷாருக்கனை விளாசித்தள்ளும் நெட்டிசன்கள்..!

இரண்டாவது திருமண பந்தத்தில் இணையும் டைரக்டர் விஜய்..!

காதலருக்காக தன்னை தாழ்த்தும் அளவுக்கு இறங்கி வந்த சர்ச்சை நடிகை..!

துருவ் விக்ரம் ஜோடியான பெங்கால் நடிகை : விரைவில் உத்தியோக பூர்வ அறிவிப்பு..!

Tags :-Tv Actress fake currency case arrested

Our Other Sites News :-

பெற்றோர் , டீசல் விலைகள் அதிகரிப்பு!