விஜயகலா உரைக்கு விசிலடித்தவர்கள் மீது விசாரணை! செல்வராஜா கஜேந்திரன் கண்டனம்!

0
494
TNPF Selvarasa Kajenthiran Statement Jaffna GA Inquiry

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற நடமாடும் சேவையின் போது கிராமசேவையாளர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உட்பட்ட அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அரசாங்கத்தின் பிரதிதிகளான அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் முன்னிலையில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் உரையாற்றும் போது அவர் புலிகளை வரவேற்று தெரிவித்த ஒரு கருத்தைக் கேட்டு விசிலடித்து கைதட்டிய விடயம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. TNPF Selvarasa Kajenthiran Statement Jaffna GA Inquiry

அரசாங்க அதிபரினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய விசாரணைக் கோரிக்கையானது ஒரு கேலிக்கூத்தான விடயம் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் ஆயுதமேந்துவது தவறு, வன்முறையில் ஈடுபடுவது தவறு என்பதால் அரசாங்கத்தின் கோமாளித்தனமான, ஏமாற்றுத்தனமான, நயவஞ்சகத்தனமான நடவடிக்கைகளுக்கு எதிராகத் தங்களின் நடவடிக்கைகளை ஏதோவொரு வகையில் வெளிப்படுத்துகின்றார்கள். இது எந்தவகையிலும் தப்பில்லை.

இந்நிலையில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக உழைக்க வேண்டிய அரசாங்க அதிபர் ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கின்ற செயற்பாட்டிற்குத் துணையாக நிற்கின்றார்.

பேரினவாத அரசுக்கு முண்டு கொடுக்கும் வகையிலும், அரசாங்கத்தின் தவறுகளை மூடி மறைக்கும் வகையிலும் அவருடைய இத்தகைய விசாரணைக் கோரிக்கை அமைந்திருக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites