புலிகள் பற்றி முன்னுக்கு பின் முரண் கருத்துக்களை கூறி குழம்பி போயிருக்கும் சம்பந்தன்!

0
446

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது, யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் பாடசாலை சிறுமி ரெஜினா கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் விஜயகலா மகேஸ்வரன் பிரபாகரன் மீண்டும் உருவாக வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். TNA Leader Sambanthan Condemn Vijayakala LTTE Statement

இந்த கருத்து தொடர்பில் பல்வேறு சர்ச்சைகள் நாடுமுழுவதும் ஏற்பட்டிருந்தது. தொடர்ந்து விமர்சனங்களுக்கு முகங்கொடுத்த விஜயகலா மகேஷ்வரன், நேற்றைய தினம் தனது சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இது தொடர்பில் கருத்து கூறியுள்ள எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா சம்பந்தன் விஜயகலா கூறிய கருத்துக்கள் தண்டிக்கப்படவேண்டும் என கூறியுள்ளார்.

யாழ் குடாநாட்டில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் சமூக விரோத செயல்களை அடிப்படையாக வைத்து அவற்றை புலிகளின் காலத்துடன் ஒப்பிட்டு விஜயகலா கூறிய கருத்தை கண்டிக்க வேண்டும் என்று கூறியுள்ள சம்பந்தன் , முதலமைச்சர் விக்கினேஷ்வரனின் நூல் வெளியீட்டு விழாவில் விடுதலைப்புலிகளை ஆதரித்து கருத்து கூறியிருந்தார்.

குறித்த நூல் வெளியீட்டு விழாவில் , விடுதலைப்புலிகளின் போராட்டமும் நோக்கமும் சரியானது என சம்பந்தன் கூறியிருந்தார்.

இதே சம்பந்த இப்போது விடுதலைப்புலிகள் பற்றி கருத்து கூறிய விஜயகலாவை எந்த அடிப்படையில் கண்டிக்க விரும்புகின்றார் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites