அரை இறுதியில் பிரான்ஸ் நுழைந்தது! உருகுவேயின் தாக்குதலை சிதறடித்தது

0
181
tamilnews football uruguay meet france quarter finals fifa world cup

(tamilnews football uruguay meet france quarter finals fifa world cup)

இரண்டு முறை உலகக் கோப்பையை வென்ற உருகுவே அணியின் வலுவான தடுப்பாட்டத்தை சிதறடித்து அரை இறுதிக்கு முன்னேறியது பிரான்ஸ்.

இன்று நடந்த ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து காலிறுதி ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்றது 1998 ல் கோப்பையை வென்ற பிரான்ஸ்.

21 வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14 ஆம் திகதி ஆரம்பித்து 28 ஆம் திகதி வரை முதல் சுற்று லீக் ஆட்டங்கள் நடந்தன.

அதைத் தொடர்ந்து ஜூன் 30 முதல் ஜூலை 3ம் திகதி வரை நாக் அவுட் சுற்று ஆட்டங்கள் நடந்தன.

இந்த உலகக் கோப்பையில் 7 முன்னாள் சாம்பியன்கள் என மொத்தம் 32 நாடுகள் களமிறங்கின. தற்போது காலிறுதி சுற்றை 8 அணிகள் எட்டியுள்ளன.

உருகுவே, பிரான்ஸ், பிரேசில், பெல்ஜியம், ரஷ்யா, குரேஷியா, ஸ்வீடன், இங்கிலாந்து ஆகியவை காலிறுதியில் விளையாடுகின்றன.

இன்று நடக்கும் காலிறுதி ஆட்டங்களில் உருகுவே – பிரான்ஸ், பிரேசில் – பெல்ஜியம் மோதுகின்றன.

நாளை நடக்கும் ஆட்டங்களில் ரஷ்யா – குரேஷியா, ஸ்வீடன் – இங்கிலாந்து சந்திக்கின்றன. பிரான்ஸ் கடந்த வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் சி பிரிவில் இடம்பெற்றிருந்த பிரான்ஸ் முதல் ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவை 2-1 என போராடி வென்றது.

பெருவுக்கு எதிராக 1-0 என்று வென்றது. டென்மார்க்குடன் கோல் ஏதும் அடிக்காமல் டிரா செய்தது. நாக் அவுட் சுற்றில், கோப்பையை வெல்லக் கூடிய அணிகளில் ஒன்றாக கருதப்பட்ட மெஸ்ஸியின் அர்ஜென்டினாவை 4-3 என வென்று காலிறுதிக்கு முன்னேறியது.

5 வது முறையாக உலகக் கோப்பையில் பங்கேற்கும் பிரான்ஸ், 1998ல் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் காலிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.

2006 ல் பைனலில் விளையாடியது. உருகுவே கடந்து வந்த பாதை இந்த உலகக் கோப்பையில் ஏ பிரிவில் இடம்பெற்றிருந்த உருகுவே, லீக் சுற்றில் மூன்று ஆட்டங்களிலும் வென்றது.

எகிப்தை 1-0, சவுதி அரேபியாவை 1-0, ரஷ்யாவை 3-0 என வென்றது. நாக் அவுட் சுற்றில் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்ச்சுகல் அணியை 2-1 என்று வென்றது.

13 வது உலகக் கோப்பையில் விளையாடும் போர்ச்சுகல், 1930ல் நடந்த முதல் உலகக் கோப்பையை வென்றது. 1950ல் மீண்டும் கோப்பையை வென்றது. கடந்த உலகக் கோப்பையில் அரை இறுதி நுழைந்து 4வது இடத்தைப் பிடித்தது.

அசத்தும் உருகுவே இந்த உலகக் கோப்பையில் இதுவரை தான் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற அணியாக உருகுவே உள்ளது.

பிரான்ஸ் தோல்வியடையவில்லை என்றாலும், ஒரு ஆட்டத்தில் டிரா செய்தது. மிகவும் வலுவான தடுப்பாட்டம் என்ற மிகப் பெரிய பலத்துடன் உருகுவே உள்ளது.

உருகுவேவுக்கு எதிராக எதிராக இதுவரை விளையாடிய 9 ஆட்டங்களிலும் பிரான்ஸ் வென்றுள்ளது. மிரள வைத்த பிரான்ஸ் இந்த உலகக் கோப்பையில் இரண்டு முன்னாள் சாம்பியன்கள் மோதும் ஒரே காலிறுதி ஆட்டம் என்பதால், பிரான்ஸ், உருகுவே இடையேயான ஆட்டம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

ஆனால், துவக்கத்தில் இருந்தே பிரான்ஸ் அதிரடியாக விளையாடி, உருகுவேவை நிலைக்குலைய செய்தது. 40வது நிமிடத்தில் வரானே, 61வது நிமிடத்தில் கிரீஸ்மான் கோலடிக்க 2-0 என பிரான்ஸ் அபாரமாக வென்றது.

இதன் மூலம் முதல் அணியாக அரை இறுதிக்கு நுழைந்துள்ளது.

(tamilnews football uruguay meet france quarter finals fifa world cup)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites