அலோசியஸின் நிறுவனத்திடமிருந்து பணம் பெற்ற சட்டத்தரணிகள் சங்கம்?

0
147
Sri Lanka Bar Association

பிணை முறி மோசடி சர்ச்சையில் சிக்கிய பேர்பச்சுவல் டிரசரீஸ் நிறுவனம் ஊடாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்துக்கு 25 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. Sri Lanka Bar Association

பிரபல சிங்கள நாளேடொன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.

2016 ஆம் ஆகஸ்ட் மாதம் 12 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்நாட்டில் நடைபெற்ற ‘Law Asia Sri Lanka Golden Jubilee Conference’ நிகழ்வுக்காக இத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

சட்டத்தரணிகள் சங்கம் 2017 ஆம் ஆண்டு நிறைவேற்று சபைக்கு சமர்ப்பித்த குறித்த நிகழ்வு தொடர்பான இலாப- நட்டக் கணக்கில் இவ் வெளிப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சட்டத்தரணிகள் சங்கம் இத்தொகையை பெற்றுக்கொண்ட போது அச்சங்கத்தின் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி ஜெப்ரி அழகரட்ணம் என தெரிவிக்கப்படுகின்றது.