கணவரை இழந்து தனியாக வாழும் எனக்கு ரஞ்சன் ராமநாயக்க போன்றோரால் அச்சுறுத்தல்! விஜயகலா தெரிவிப்பு!

0
396

யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டுமென விஐயகலா மகேஸ்வரன் கருத்து வெளியிட்டிருந்தார். இதற்கு தெற்கில் பலத்த எதிர்ப்புக்கள் வெயிடப்பட்டு வருகின்றன. ranjan ramanayake vijayakala telephone conversation issue

இந் நிலையில் விஐயகலாவின் கட்சியைச் சேர்ந்த அமைச்சரான ரஞ்சன் ராமநாயக்க தாம் நடத்திய ஊடக சந்திப்பின் போது வியகலாவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதனை ஊடகங்களுக்கு நேரலையில் விட்டிருந்தார்.

இந்த விடயத்தில் ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் என விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவித்துள்ளார்

தனியார் தொலைக்காட்சியொன்றுக்கான நேர்காணலின் போது விஐயகலா கூறிய கருத்துக்களின் படி,

அவர் பாராளுமன்றத்தில் சக பாராளுமன்ற உறுப்பினர் என்ற விதத்தில் சிநேகித அடிப்படையில் அவர் அழைத்த தொலைபேசி அழைப்பினை செவிமடுத்திருந்தேன் அந்த தொலைபேசியில் அழைப்பை பேசி முடித்து வைக்கும் வரைக்கும் எனக்கு தெரியாது இவர் நேரடியாக ஊடகங்களின் ஊடாக இருந்து கொண்டு தொலைபேசியை அவட்ஸ்பீக்கரில் வைத்து கதைப்பது. இவர் ஒரு பெண் துரோகம் செய்திருக்கின்றார். அதுவும் ஒரு பாராளுமன்ற உறுப்பினருக்கு  துரோகம் செய்திருக்கின்றார் என்பதையே இந்த உலகம் அறிந்திருக்கின்றது இப்படியானவர்கள் தான் இந்த பாராளுமன்றில் இருக்கிறார்கள் இப்படியானவர்களின் கருத்தை எப்படி பாராளுமன்றின் உள்ளேயும் வெளியேயும் செவிமடுக்க இயலும் .

அதேவேளை, கணவனை இழந்து தனிய வாழ்ந்து கொண்டிருக்கும் வேளை என்னுடைய பாதுகாப்புக்கும் இந்த விடயம் அச்சுறுத்தலாககத்தான் இருக்கின்றது. அதை நான் உரிய இடங்களுக்கு நான் சமர்ப்பிப்பேன் என கூறியுள்ளார்.

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites