ரணிலுடன் சிங்கப்பூருக்கு பயணமாகிறார் சஜித் பிரேமதாச

0
533
Ranil attend Sixth International Urban Conference Singapore

(Ranil attend Sixth International Urban Conference Singapore)

பிரதமர் ரணில் விக்ரமசிங்க சிங்கப்பூரில் இடம்பெறும் ஆறாவது சர்வதேச நகர மாநாடு மற்றும் சிங்கப்பூர் சர்வதேச நீர் முகாமைத்துவ வாரம், தூய்மையான சூழல் மாநாடு ஆகியவற்றில் கலந்துகொள்வதற்காக எதிர்வரும் நாளை மறுதினம் (08) சிங்கப்பூருக்கு பயணமாகவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது சிங்கப்பூர் பிரதமர் லீ சின் லுங், பிரதிப் பிரதமர் மற்றும் பொருளாதார, சமூகக் கொள்கைகள் தொடர்பான ஒருங்கிணைப்பு அமைச்சர் தர்மன் சண்முகரத்னம், சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் கோ சொக் டொன் உள்ளிட்ட சிங்கப்பூர் அரசாங்கத்தின் உயர் மட்ட தரப்பினர் பலரையும் சந்திக்கவுள்ளார்.

ஜூலை 09 ஆம் திகதி சர்வதேச நகர மாநாட்டின் ஆரம்ப அமர்வில் ‘நகர அபிவிருத்தி மற்றும் சூழலைப் பாதுகாத்தல்’ எனும் தலைப்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதான உரையை ஆற்றவுள்ளார்.

இந்த வருட மாநாட்டின் கருப்பொருள் ‘புத்தாக்கம் மற்றும் ஒத்துழைப்பு ஊடாக எதிர்காலத்திற்குப் பொருத்தமான நிலைபேறான நகரங்களை உருவாக்குதல்’ என்பதாகும்.

அத்துடன், முறையான நிர்வாகம் மற்றும் திட்டமிடல், தொழிநுட்பம், சமூகப் புதிய உற்பத்திகள், ஏனைய நகர மற்றும் பங்காளர்களுடன் முறையான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதன் மூலம் வாழ்வதற்குப் பொருத்தமான நகரங்களை உருவாக்கிக் கொள்வது குறித்து இங்கு கவனம் செலுத்தப்படும்.

பேராசிரியர் மைத்திரீ விக்கிரமசிங்க, நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் ரவூப் ஹக்கீம், வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ, அபிவிருத்தி மூலோபாயங்கள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, கனிய வளங்கள் அபிவிருத்திப் பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்கின்றனர்.

பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

(Ranil attend Sixth International Urban Conference Singapore)

தமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை

Tamil News Group websites